காதலிப்பதாக கூறி பெண்களை ஏமாற்றிய பா.ஜ.க பிரமுகர் கைது;ரூ. 50 லட்சம் வரை பணம் பறித்ததாக குற்றச்சாட்டு

காதலிப்பதாக கூறி 10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
bjp person arrest

வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் லியாஸ் தமிழரசன்

தாம்பரம் அருகே உள்ள திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன் பாஜகவில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இவர் சுமார் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கடந்த 2018ம் ஆண்டு முதல் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

Advertisment

கடந்த 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் லியாஸ் தமிழரசன் அந்தப் பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி தவறாக இருந்துள்ளார்.  மேலும் அதனை அப்பெண்ணுக்கு தெரியாமல் வீடியோவாக பதிவும் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் லியாஸ் தமிழரசன் பல இடங்களுக்கு அந்தப் பெண்ணை அழைத்து சென்று பல முறை தவறு செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் லியாஸ் தமிழரசனிடம் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது லியாஸ் தமிழரசன் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதோடு அந்த வீடியோக்களை காட்டி இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியும் உள்ளார்.

பின்னர் லியாஸ் தமிழரசன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பெண் லியாஸ் தமிழரசன் மீது சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment
Advertisements

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் 10க்கும் மேற்பட்ட பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி ரூ.50 லட்சம் வரை பணம் பறித்ததாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த பணத்தை வைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திவிட்டு தனக்கு ஒரு கார் வாங்கி கொண்டதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீஸார் நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தனர்.

Chengalpattu Arrest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: