பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்ப வழக்கில் தமிழக போலீசாரால் கைதுசெய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி, வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அவரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பாரதிய ஜனதா தரப்பு வழக்குரைஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக காவல் துறைக்கு அனுமதி அளித்தார்.
முன்னதாக அமர் பிரசாத் ரெட்டிக்கு மூச்சுத் திணறல் மற்றும் ரத்த கொதிப்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மாத்திரை மற்றும் உரிய துணிகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அமர் பிரசாத் ரெட்டி மீது செஸ் போட்டியின்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை சேதப்படுத்தியது என மேலும் இரண்டு வழக்குகளும் உள்ளன.
இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய அமர் பிரசாத் ரெட்டி, “நாட்டுக்காக உழைக்கிறோம். எல்லாமே ஜோடிக்கப்ப்ட பொய் வழக்குகள்” என்றார்.
தொடர்ந்து, அமர தடுக்கணும், பாத யாத்திரையை தடுக்கணும், பாஜகவை தடுக்கணும் என்று இதை பண்ணுராங்க” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“