Advertisment

பா.ஜ.க.,வின் நம்பிக்கை போராளி; பெரிய தாக்கத்துடன் தமிழக தேர்தல் களத்தில் நுழைந்த அண்ணாமலை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியின் நகர்ப்புற, அரை நகர்ப்புற பகுதியில் கூட்டத்தை ஈர்க்கிறார், "வழக்கமான திராவிட அரசியலை" தூக்கியெறிய பல்வேறு தரப்பினரை சந்திப்பதாக கூறுகிறார்

author-image
WebDesk
New Update
annamalai kovai

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை (எக்ஸ்பிரஸ் புகைப்படம் – அருண் ஜனார்த்தனன்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Arun Janardhanan

Advertisment

நம்பிக்கை இல்லை என்றால் கே.அண்ணாமலை ஒன்றுமில்லை. இது அவரது முதல் மக்களவைத் தேர்தலாக இருக்கலாம், ஆனால் தமிழக பா.ஜ.க தலைவர் தனது கோயம்புத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்யும்போது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க காத்திருந்த ஆதரவாளர்களை இரவு வெகுநேரம் வரை மகிழ்வித்து வருவதால் அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

ஆங்கிலத்தில் படிக்க: BJP’s prize fighter, K Annamalai enters the Tamil Nadu poll ring with a punch

அந்த நம்பிக்கைக்கு, கூட்டத்தைத் தவிர, ஒரு அடிப்படையும் இருக்கிறது. மூத்த தலைவர்களை ஓரம்கட்டி மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற, 39 வயதான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.க.,வை லைம்லைட்டில் வைத்திருக்கிறார், மேலும், அவர் பா.ஜ.க வளர்ந்துள்ளதாக கூறினாலும், கட்சி மாநிலத்தில் இன்னும் முத்திரை பதிக்கவில்லை.

கோயம்புத்தூர் பெரும்பாலும் நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் தொகுதியாகும், அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சிகள் வலுவான வாக்கு வங்கியை வைத்துள்ளன மற்றும் பா.ஜ.க.,வுக்கும் கணிசமாக வாக்குவங்கி உள்ளது, அண்ணாமலையின் போலீஸ் வரலாறு இப்போது கூடுதல் பிளஸ். அதோடு, இறுக்கமான பாதையில் பயணிக்கும் கட்சி, அ.தி.மு.க. மீதான அவரது கட்டுக்கடங்காத விமர்சனத்தை அப்படியே அனுமதித்து, கடைசியில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளிநடப்பு செய்யும் வரை, அவருக்குக் கொடுத்த சுதந்திரத்தை தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

வரும் லோக்சபா தேர்தலில், கட்சி அ.தி.மு.க.,வை இழந்துள்ள நிலையில் உள்ளது, ஆனால் இது மாநிலத்தில் பா.ஜ.க.வின் நீண்ட கால நலன்களுக்கு உதவுமா என்பதில் கேள்விகள் உள்ளது.

வியாழன் மாலை கோயம்புத்தூர் வழியாக தனது பிரச்சாரத்திற்காக பயணித்த அண்ணாமலையுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய உரையாடலில், பா.ஜ.க (BJP) "இரட்டை இலக்கத்தில்" இடங்களைப் பெறும் என்றும், "மீதமுள்ள அனைத்து இடங்களிலும்" இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்றும் அண்ணாமலை கூறுகிறார். வரும் தேர்தலில் தென்னிந்தியாவில் பா.ஜ.க.வின் எழுச்சியின் முகமாக தமிழகம் இருக்கப் போகிறது கூறிய அண்ணாமலை, “வழக்கமான அரசியல் வர்க்கங்களுக்கு எதிரான கிளர்ச்சியை நாம் காணப்போகிறோம். இது (பா.ஜ.க.,வுக்கு பின்னால்) வெறும் ஒருங்கிணைப்பு அல்ல, ஆனால் பாரம்பரிய திராவிட கட்சிகள் மற்றும் பூஜ்ஜிய வளர்ச்சிக்கு எதிராக சில சமூகங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கிளர்ச்சி” என்றும் கூறினார்.

nara lokesh annamalai
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் நாரா லோகேஷ் கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் (எக்ஸ்பிரஸ் புகைப்படம் – அருண் ஜனார்த்தனன்)

மறைந்த அ.தி.மு.க., தலைவரான ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று கூறுவதில் தயக்கம் காட்டாத அண்ணாமலை, அவருடன் நல்லுறவு வைத்திருந்த நரேந்திர மோடி, அவரைப் பற்றி நல்ல விதமாக கூறுவதாக கூறுகிறார். “எனக்கு களம், மூலை முடுக்கெல்லாம் தெரியும். மூலையில்... குறிப்பாக தெற்கில் அ.தி.மு.க.,வின் சரிவு தெளிவாகத் தெரிகிறது, வெற்றிடத்தை நிரப்புகிறோம்... மேலும் நான் அ.தி.மு.க தலைமையைத் தாக்குகிறேன், தொண்டர்களை அல்ல... ஒரு கட்சிக்கு ஊக்கமளிக்கும் தலைவர்கள் இல்லாதபோது, அவர்கள் தங்கள் வாக்காளர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அ.தி.மு.க.வில் ஊழல் நிறைந்த, சுயநலத் தலைமை உள்ளது, அது சமூகம் சார்ந்தது... நான் எம்.ஜி.ஆரை விமர்சித்ததில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்,” என்று அண்ணாமலை கூறுகிறார்.

சந்தேகம் உள்ளவர்களுக்கு, அண்ணாமலை தனது அனைத்து முடிவுகளும் ரிசல்ட் நாளான ஜூன் 4 ஆம் தேதி "நிரூபிக்கப்படும்" என்று கூறுகிறார். கோவை மட்டுமின்றி, திருநெல்வேலி மாவட்டமும், தென்காசியும், பா.ஜ.க, கோட்டையாக உருவெடுக்கும் என, அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களில் இளம் மற்றும் பிரபலமான அ.தி.மு.க முகமான சிங்கை ராமச்சந்திரன், முன்னாள் கோவை மேயரும் தி.மு.க கூட்டணி வேட்பாளருமான கணபதி ராஜ்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கலாமணி ஆகியோர் அடங்குவர்.

2019 ஆம் ஆண்டில், தி.மு.க தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் CPI(M) இன் P.R நடராஜன் வெற்றி பெற்றார், இங்கு 45.85% வாக்குகளைப் பெற்றார். அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் 31.47% வாக்குகள் பெற்ற பா.ஜ.க.,வின் சி.பி ராதாகிருஷ்ணன் அவரது நெருங்கிய போட்டியாளர் ஆவார்.

பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலைக்கு உயரும் நட்சத்திரமாக அவரது அந்தஸ்துக்கு ஏற்ற வாகனத்தை வழங்கியுள்ளது, முழுமையான மோட்டார் மேடையுடன் அமைந்துள்ள வாகனம், அவரது கான்வாய்யைச் சுற்றி வரும் மக்களை வரவேற்கவும், வலம் வரும்படி செய்யவும் அவரை மேலே உயர்த்துகிறது. வியாழன் இரவு தேர்தல் கமிஷனின் காலக்கெடுவான 10 மணியை கடந்து செல்லும் போது, ஒரு இடத்தில் ஒரு குழந்தையை "ஆசீர்வதிக்க" உயர்த்தப்படுகிறது; மற்றொன்றில் மாலைகள் பொழிகின்றன; இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் குழு பீளமேட்டில் அவரது ஆட்டோகிராப் தேடுகிறது; மற்றவர்கள் செல்ஃபி எடுக்க விரும்புகிறார்கள். ஒருவர் தன் தாயை அழைத்து வரும்போது, அண்ணாமலை ஆசிர்வாதம் வாங்குகிறார்.

அவர்களுடன் ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்ளாவிட்டாலும், நடுத்தர வர்க்க சுற்றுப்புறங்களில் அவர் செல்லும் போது, கிட்டத்தட்ட அனைவரையும் வாழ்த்துவதை உறுதி செய்கிறார்.

வேன் ஓட்டுநரின் பேனாவைப் பயன்படுத்தி ஆட்டோகிராப் எழுதும், அண்ணாமலை, இந்த பகுதிகளில் உள்ள "உண்மையான வளர்ச்சிக்கும் திராவிட வளர்ச்சி மாதிரிகளின் வெற்று சொல்லாட்சிக்கும் இடையே உள்ள அப்பட்டமான வேறுபாடு" காரணமாக மக்கள் பா.ஜ.க.,வை விரும்புகிறார்கள் என்று கூறினார்.

நான்கரை மணிநேரம் தாமதமானாலும் முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் அவரைச் சந்திக்க எப்படிக் காத்திருந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டு அண்ணாமலை கூறுகிறார்: “இவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட கட்சிக் கூட்டம் அல்ல... பா.ஜ.க அவர்களின் கற்பனையை கவர்ந்ததால் அவர்கள் எங்களுக்கு வாக்களிக்கப் போகிறார்கள்.”

“நவீன நடுத்தர வர்க்கம் மற்றும் பல பொருளாதார வர்க்கங்கள் உள்ளன. இந்தத் தேர்தல் அவர்களின் எழுச்சியைப் பற்றியதாக இருக்கும். அவர்களின் குழந்தைகள் ஆர்வமுள்ளவர்கள், அவர்கள் சிறந்த கல்வி, வேலை வாய்ப்புகள், நகரங்களை விரும்புகிறார்கள்,” என்று அண்ணாமலை கூறினார்.

பாரதிய ஜனதா கட்சி வைத்திருக்கும் மற்ற வாக்குறுதிகள் குறித்தும் அண்ணாமலை தெளிவாக இருக்கிறார்: இந்துத்துவா, தமிழகத்தில் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் சமூக பொறியியல் திட்டத்தில் 2014 முதல் கட்சி திட்டமிட்டு செயல்பட்டு, முன்னோக்கி மற்றும் பின்தங்கிய குழுக்களை இணைக்கிறது

சிறுபான்மையினரைப் பற்றி என்ன சொல்வது, குறிப்பாக தி.மு.க மற்றும் அதன் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கும் கோயம்புத்தூரில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள உக்கடம் போன்ற பகுதிகளில்?

எல்லோருடனும் சமமாகப் பழகுவேன் என்கிறார் அண்ணாமலை. “நான் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் பழகுவது போல் முஸ்லிம்களுடனும் பழகுவேன். எனக்கு, அதே கதை, அதே பேச்சு... ஒரு முஸ்லீம் எனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? ஒரு இந்து அல்லது கிறிஸ்தவர் செய்ய வேண்டிய அதே காரணத்திற்காக: அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் குழந்தைகளுக்கு நியாயமான நகரத்தை உருவாக்க நான் சிறந்த வேட்பாளர். எனவே, நான் மதங்களுக்கு இடையே வேறுபாடு காட்டவில்லை. அவர்களும் கூடாது.” என்று அண்ணாமலை கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai Bjp kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment