scorecardresearch

சினிமா பைனான்சியர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு; ரூ.200 கோடி பறிமுதல்

இந்த வருமான வரிச்சோதனை ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டன.

income Tax
Tamil news updates

தமிழ்நாட்டில் உள்ள சில திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பைனான்சியர்களிடம் வருமான வரித்துறை சமீபத்தில் நடத்திய சோதனையில், ரூ.200 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருமானம் கண்டறியப்பட்டுள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியத்திடமிருந்து (CBDT) தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருமான வரிச்சோதனை ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டன.

இந்த சோதனையின் போது 26 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கம் மற்றும் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில். இதுவரை, தேடுதல் நடவடிக்கையில், 200 கோடி ரூபாய்க்கு மேல், கணக்கில் வராத வருமானம் கண்டறியப்பட்டுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் கணக்கிடப்படாத பண பரிவர்த்தனைகள் தொடர்பான டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் ரகசிய மற்றும் மறைக்கப்பட்ட முதலீடுகள், மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களைப் பொறுத்தவரை, வழக்கமான கணக்குப் புத்தகங்களில் காட்டப்படும் தொகையை விட, திரைப்படங்கள் வெளியானதிலிருந்து பெறப்பட்ட உண்மையான தொகைகள் அதிகம் என்பதால் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திரைப்பட விநியோகஸ்தர்களைப் பொறுத்தவரை, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் திரையரங்குகளில் இருந்து “கணக்கில் காட்டப்படாத பணம்” வசூலித்ததைக் காட்டுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரங்களின்படி, விநியோகஸ்தர்கள் சிண்டிகேட்களை உருவாக்கி, தியேட்டர் வசூலை திட்டமிட்டு நசுக்கியுள்ளனர், இதன் விளைவாக உண்மையான வருமானம் ஒடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Black income of over rs 200 cr detected in i t raids on tn film producers financiers cbdt

Best of Express