கொரோனா தமிழகத்தில் பரவி வரும் நேரத்தில், இரத்தம் மிகவும் முக்கியமான தேவையில் இருக்கிறது.
இந்நிலையில், இரத்தத்தின் மூலம் ஓவியம் வரையும் கலாச்சாரத்தை கண்டித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது:

"தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் ஒரு புதுவித கலாச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'பிளட் ஆர்ட்' என்று சொல்லப்படும் இந்த கலாச்சாரம், தன்னுடைய இரத்தத்தை எடுத்து ஓவியங்கள் வரைந்து, விரும்புவோருக்கு அனுப்புவது வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
குறிப்பாக காதலில் ஈடுபடுபவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். 'பிளட் ஆர்ட் சென்டர்ஸ்' என்றே கூட இரத்தத்தில் ஓவியம் வரைவதை ஒரு தொழிலாகவே நடத்தி வருகின்றனர்.
இவை எல்லாம் இன்றைய காலத்தில் முக்கியமாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இரத்த தானம் என்பது பல உயிர்களைக் காப்பதற்குரிய புனித கடமையைக் கொண்டது.
அதனால், அந்த இரத்தத்தை எடுத்து படம் வரைவது சரியான ஒன்றல்ல. இரத்தம் மூலம் ஓவியமாக வரைந்து பரிசளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்", என்று கூறியுள்ளார்.