வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் நீலநிற கண்ணாடி மணி மற்றும் சுடுமண் பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதுவரை தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2850-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் நீல நிற கண்ணாடி மணி, சுடுமண்ணால் ஆன பதக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னோர்கள் இதனை அணிகலன்களாக பயன்படுத்தியுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“