Advertisment

பாம்பன் கடற்கரையோரம் ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்: வைரல் வீடியோ

ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் சுமார் 2 டன் எடை கொண்ட ராட்சத திமிங்கலம் கரை ஒதுங்கியது. இதன் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Whale

ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் கடற்கரையில் ராட்சத திமிங்கலம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய கடல் பகுதியில் கடற் பசு, திமிங்கலம், சுறா, டால்பின், கடற் குதிரை, உள்ளிட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன.

இந்நிலையில், பாம்பன் தெற்கு வாடி கடற்கரையில் ராட்சத திமிங்கலம் இறந்த நிலையில் இன்று (டிச 11) காலை கரை ஒதுங்கியதாக வனத் துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். 

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், இறந்து கிடந்த 18 அடி நீளம், 2 டன் எடை கொண்ட அரிய வகை  ராட்சத திமிங்கலத்தை ஜே.சி.பி உதவியுடன் மீட்டனர். இதனை கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறு ஆய்வு செய்து கடற்கரை மணலில் புதைக்க ஏற்பாடு செய்தனர்.

Advertisment
Advertisement

நீல திமிங்கலம் 118 அடி நீளம் வரை வளரக்கூடியது. இறந்த நிலையில் இன்று கரை ஒதுங்கிய நீலத்திமிங்கலம், குட்டியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. திமிங்கலம் உயிரிழந்ததன் காரணம், உடற்கூராய்விற்கு பின்னர் தெரியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Viral Video Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment