சென்னையில் மதுரவாயல் - தாம்பரம் உயர்த்தப்பட்ட பைபாஸ் சாலையில், பாண்டி பஜார் பகுதியைச் பிரதீப் குமார் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் பிரபல தெலுங்கு செய்தி சேனலில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்துள்ளார். அது மட்டுமன்றி அவர், பகுதி நேர ரேபிடோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஓ. பிரதீப் குமார் இன்று (நவம்பர் 20) தாம்பரம் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவர் மீது அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் மோதியது. இதில் பிரதீப் குமாரின் உடல் சுமார் 100 மீட்டர் தூரம் வீசப்பட்டது. பிரதீப் குமாரின் உடலை சாலையின் கீழ் பகுதியில் போலீசார் தேடி எடுத்தனர்.
சம்பவ இடத்தில் பிரதீப் குமாரின் அடையாள அட்டையும் கண்டெடுக்கப்பட்டது. ஊடகத்தில் பணிபுரிந்த போதிலும், பிரதீப் குமார் தனது ஓய்வு நேரத்தில் பைக் டாக்சி ஓட்டுநராகப் பணிபுரிந்தார் என்று அவரை நேரில் அறிந்த வீடியோ ஒளிப்பதிவாளர் ஒருவர் கூறினார்.
விபத்து ஏற்பட்டதும் பி.எம்.டபிள்யூ கார் டிரைவர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். முதற்கட்ட விசாரணையில், காரின் தானியங்கி சென்சார் அமைப்பு, மோதலைத் தொடர்ந்து வாகனத்தை நிறுத்தும்படி கட்டாயப்படுத்தியிருக்கலாம், இதனால், ஓட்டுநர் அதை அங்கேயே விட்டுச் செல்லும்படி கட்டாயப்படுத்தியிருக்கலாம்.
விபத்தில் சிக்கிய கார் மற்றும் பைக் சாலையில் இருப்பதை அவ்வழியே சென்ற பயணிகள் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தன்ர. இதையடுத்து, அங்கே வந்த போலீசார் ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு, பிரதீப் குமாரின் சடலம் கண்டெடுத்தனர். ஆனால், பி.எம்.டபிள்.யூ டிரைவரை இன்னும் பிடிக்கவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“