/tamil-ie/media/media_files/uploads/2021/05/cats-2.jpg)
boiler exploded in Cuddalore chemical plant : கடலூர் அருகே குடிக்காடு அருகே செயல்பட்டு வரும் சிப்காட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் இன்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் இருந்த பாய்லர் ஒன்று வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மூன்று பேர் உயிரிழந்தனர்.
மேலும் படிக்க : ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 4.8 டன் மருத்துவ ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை பணியில் ஈடுபட்ட நிலையில் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. விபத்தில் சென்றவர்களை காப்பாற்ற சென்ற பலருக்கும் ரசாயனம் மேலே தெறித்தால் காயம் ஏற்பட்டு அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டு சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் கரும்புகையால் மூடியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.