மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 600மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகுகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டு பிரிவுகளிலும் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதனிடையே இன்று மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் உள்ள கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“