சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் அது புரளி எனத் தெரியவந்தது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக இ-மெயில் பக்கத்திற்கு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பல்கலைக் கழகம் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்த விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் பல்கலைக்கழகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இந்நிலையில், பல்கலைக் கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
முன்னதாக நேற்று, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா நேற்று (ஜூலை 2)பல்கலை வளாகத்தில் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏஐசிடிஇ தலைவர் டி.ஜி.சீதாராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொடர்ந்து ஆளுநர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“