கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் விசாரணை

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபர் மீது பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

கோவை பன்னாட்டு விமான நிலையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு கடந்த 29ஆம் தேதி மாலை 6:50 மணிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

அதில் கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தினர்.

மேலும் சோதனை முடிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் வந்தது வதந்தி என தெரியவந்தது. இதையடுத்து அடுத்து கோவை நிலைய தலைமை பாதுகாப்பு அலுவலர் மேத்யூ, பீளமேடு காவல் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக புகார் அளித்தார்.

Advertisment
Advertisements

Coimbatore

அந்த புகாரின் பேரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நாளில் கோவா விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: