இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சர்ச்சை வசனத்திற்கு எதிர்ப்பு

Bomb Threat to Mani Ratnam's Chennai Office: சென்னை அபிராமபுரத்தில் உள்ள மணிரத்னம் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசியில் மிரட்டியிருக்கிறான்.

Bomb Threat to Mani Ratnam’s Office: வெடிகுண்டு மிரட்டலுக்கும், மணிரத்னத்திற்கும் அப்படி என்ன பந்தமோ தெரியவில்லை. மீண்டும் ஒரு முறை அவரது அலுவலகம் மிரட்டப்பட்டிருக்கிறது.

மணிரத்னம், இந்திய அளவில் பிரசித்தி பெற்ற இயக்குனர்! அவரது படங்களுக்கு பாலிவுட்டில் நல்ல மரியாதை! 1995-ம் ஆண்டு அவரது வீட்டில் நடைபெற்ற வெடிகுண்டு வீச்சு தமிழக அரசியலையே புரட்டிப் போட்டது என்பது வரலாறு!

அந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பாட்ஷா படத்தின் வெற்றிவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாக’ கொந்தளித்தார். அதுவே அப்போதைய ஜெயலலிதா அரசுக்கு எதிராக அலை வலுப்பெற ஒரு காரணமாக அமைந்தது. அடுத்த தேர்தலில் ஜெயலலிதா வீழ்த்தப்பட்டார்.

Bomb Threat to Mani Ratnam’s Chennai Office: மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்:

இந்தச் சூழலில் மீண்டும் மணிரத்னம் அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு நிகழ்ந்திருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ரமேஷ் அரவிந்த், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்து வெளியான செக்கச் சிவந்த வானம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

செக்கச் சிவந்த வானம் படத்தில் புதுச்சேரியை விபசார விடுதியாக சித்தரிக்கும் வகையில் ஒரு வசனம் இருப்பதாக சிலர் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்கள். இதை தொடர்ந்து இன்று அதிகாலை யாரோ ஒரு மர்ம நபர் சென்னை அபிராமபுரத்தில் உள்ள மணிரத்னம் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசியில் மிரட்டியிருக்கிறான்.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அஹிம்சாமூர்த்தியான காந்தி பிறந்த நாளான காந்தி ஜெயந்தியன்று இந்த வெடிகுண்டு மிரட்டல் விட்டிருப்பதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. போனில் மிரட்டிய ஆசாமி குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close