சென்னையில், கோபாலபுரம், அண்ணாநகர், சாந்தோம், ஜெ.ஜெ.நகரில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்த்து, பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட மர்ம நபர் கோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி, அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி, சாந்தோமில் உள்ள ஒரு தனியார் பள்ளி, ஜெ.ஜெ. நகரில் ஒரு தனியார் பள்ளி என மொத்தம் 4 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் 4 தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு அந்த தனியார் பள்ளிகளுக்குச் சென்று நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் கோபாலபுரம், அண்ணாநகர், சாந்தோம், ஜெ.ஜெ.நகரில் என மொத்தம் 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அந்த பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் பதற்றத்துடன் வந்து குவிந்தனர். இதனால், அந்த தனியார் பள்ளிகளில், பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, பெருநகர சென்னை போலீஸ் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “பெருநகர சென்னை போலீஸ் எல்லைக்குள் சில கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது. பெருநகர சென்னை போலீஸ் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழு சோதனை செய்ய அந்த கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றவாளி யார் என்று அடையாளம் காணும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“