/tamil-ie/media/media_files/uploads/2018/06/actor-vijay-hbd.jpg)
Bomb threaten to Actor Vijay's home, bomb threaten to vijay home, unknown bomb threaten to vijay home, விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல், போலீஸ் விசாரணை, பிகில், நடிகர் விஜய், actor vijay, vijay, bigil movie, chennai police, chennai police probing
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படம் வெளியான மறுநாள் விஜய்யின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த பிகில் படம் கடந்த 25 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் 2 நாட்களில் ரூ.100 கோடியை வசூலை தாண்டியுள்ளது.
பிகில் படம் வெளியான மறுநாள் சனிக்கிழமை நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் அழைப்பு வந்தது. இதையடுத்து, போலீசார் உடனடியாக சென்னை சாலிகிராமம், பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளில் சோதனை செய்தனர். ஆனால், அங்கே வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, விஜய்யின் வீட்டுக்கு பாதுகாப்பு அளித்த போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்று விசாரணையைத் தொடங்கினர்.
போலீசாரின் விசாரணையில், விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் நம்பர் போரூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞரின் எண் எனத் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, விரைந்து சென்ற போலீசார் அந்த இளைஞரைப் பிடித்து விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கு காரணம் என்ன என்று விசாரணை செய்ததில், சேப்பாக்கத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் பேச வேண்டும் எனக் கூறி அவருடைய செல்போனை கடன் வாங்கி பேசியதாக கூறியுள்ளார்.
இதனால், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் யார் என்பதைக் கண்டுபிடிக்க போலீசார் சேப்பாக்கம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us