ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் சோதனைக்கு மறுத்த குடும்பத்தினர்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் 108 அவசர எண்ணுக்கு அழைத்து தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

By: Updated: June 18, 2020, 06:48:24 PM

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் 108 அவசர எண்ணுக்கு அழைத்து தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் 2018-ம் ஆண்டு அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அவருடைய ஒவ்வொரு கருத்துகளும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விவாதமாகிறது. விரைவில் அவர் அரசியல் கட்சியைத் தொடங்கி கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், கொரோனா வைரஸால் நடைமுறையில் உள்ள பொது முடக்கம் காரணமாக தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆம்புலன்ஸ் அவசர சேவைக்கான 108 அவசர எண்ணுக்கு போனில் அழைத்த மர்ம நபர் ஒருவர், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்துவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழு, ரஜினியின் வீட்டுக்கு சோதனை செய்ய சென்றுள்ளனர். அங்கே ரஜினியின் குடும்பத்தினர் கொரோனா அச்சம் காரணமாக அவர்களை உள்ளே விட அனுமதிக்க மறுத்து வெளியே நிற்க வைத்துள்ளனர். அதற்கும் வெடிண்டு கண்டறியும் நிபுணர்கள் தங்கள் வேலை செய்ய விடுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால், ரஜினி குடும்பத்தினர் எந்த பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர். இதையடுத்து, போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 11 நிமிடங்களுக்கு மேல் அங்கேயே காத்திருந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நிபுணர்கள் குழு ரஜினி வீட்டின் செக்யூரிட்டி அறை மற்றும் ரஜினிவீட்டுக்கு அருகே உள்ள சாலைகளில் சோதனை செய்துவிட்டு திரும்பியுள்ளனர். இதனை மூத்த பத்திரிகையாளர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த தொலைபேசி அழைப்பு பொய்யான மிரட்டல் என்று தெரியவந்தது. இருப்பினும், ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத அந்த மர்ம நபர் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் கூறுகையில், “ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஒரு அழைப்பு வந்தது உண்மைதான். அழைப்பு வந்ததும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் அனுப்பப்பட்டு ரஜினிகாந்த் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததை அடுத்து அவர்கள் திரும்பி வந்துவிட்டனர். ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்று விசாரித்து வருகிறோம். அது தொடர்பாக இன்னும் எதுவும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை இனிமேல்தான் வழக்கு பதிவு செய்வோம்” என்று தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bomb threaten to rajinikanth poes garden house

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X