/indian-express-tamil/media/media_files/3ho0ZIibq8Eyei3ZR2Pi.jpg)
கோயம்புத்தூர் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் 'பிக்பாங்க் 2024' என்ற பெயரில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள நேஷனல் மாடல் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 35 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளின் 90க்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
முன்னதாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது, பள்ளியில் படிக்கும் மாணவர்களை சர்வதேச அளவில் செஸ் வெற்றியாளர்களாகவும் கிரிக்கெட் வெற்றியாளர்களாக உருவாக்க முடிகிறது என்றால் விஞ்ஞானியாக உருவாக்கும் வாய்ப்பையும் உருவாக்கினால் மாணவர்கள் நிச்சயமாக வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்தவர்.
/indian-express-tamil/media/media_files/vTCLjGFbeUJKQZS9ih7O.jpeg)
மாணவர்கள் சாதனை புரிவதற்கு ஊடகமும் ஒரு காரணமாக இருக்கிறது என்றும் அவர்களது சாதனை செய்தியாகும் பொழுது மாணவர்களுக்கு ஒரு உத்வேகம் கிடைக்கிறது என்றும் மாணவர்களின் கண்டுபிடிப்பு ஆர்வத்தை அரசும் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது பாராட்டுக்குரியது என்றார்.
மேலும் தன்னுடைய கோவை கிணத்துக்கடவு பள்ளியில் அடுத்த மூன்று வாரத்தில் ஒரு புத்தாக்க மையம் உருவாக்க இருப்பதாகவும் விளையாட்டு மைதானம் இருக்கும் பொழுது எப்படி ஒரு விளையாட்டு வீரர் உருவாகிறாரோ அது போன்று ஆய்வுக்கூடம் உருவாக்கும் போது மாணவர்கள் அங்கு தனது ஆர்வத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றார்.
இதேபோல் செஸ் போட்டியை போன்று புத்தாக்கங்களுக்கும் உலகளாவிய போட்டிகள் இருப்பதாகவும் அதை நோக்கி செல்வதற்கு மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும் அதற்கான கட்டமைப்புடன் பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். எல்லா மாணவர்களும் விஞ்ஞானியாக முடியாது. ஆனால் அந்த ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்தால் தவறு என்றும் மயில்சாமி அண்ணாதுரை சுட்டிக்காட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us