பொங்கல் பண்டிகைக்காக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதன்படி, "ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் விடுமுறையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதலே புறப்பட தயாராவார்கள்.
அரசு பேருந்துகளை பொறுத்தவரை ஒரு மாதத்திற்கு முன்பு தான் முன்பதிவு செய்ய முடியும். ஆனால், தற்போது 2 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும் வகையில் நடைமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கான முன்பதிவு தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. பண்டிகை கால நெரிசலை தவிர்க்கும் விதமாக அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம் www.tnstc.in மூலமாக முன்பதிவு செய்யலாம். இதேபோல், டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாகவும் பேருந்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும், பயணிகளின் வசதிக்காக முன்பதிவு மையங்கள் சென்றும் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“