தமிழகத்தில் சாலை உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டார். இது பிராந்திய இணைப்பை மேம்படுத்துதல், பயண நேரத்தைக் குறைத்தல் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
ஈரோடு, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்ட நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் மாநில நெடுஞ்சாலையை விரிவுபடுத்த ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் மேட்டுக்கடை-மூத்தம்பாளையம் நெடுஞ்சாலையை விரிவுபடுத்த ரூ.6.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் மாநில நெடுஞ்சாலை 154-ஐ விரிவுப்படுத்த ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு, தஞ்சை, திருச்சியில் மேலத்தூர்-பத்தலப்பேட்டை சாலையை விரிவுபடுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு, திண்டுக்கல்லில் தர்மத்துப்பட்டி, ஆடலூர், தாண்டிக்குடி சாலையை விரிவுபடுத்த ரூ.5.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.