திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பள்ளி வளாகத்தில் பலியான மாணவன் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்த, தோளூர்பட்டியைச் சேர்ந்த மவுலீஸ்வரன் என்ற மாணவர் பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே எதிர்பாரத விதமாக நடந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தார்.

இந்த செய்தியறிந்து மிகுந்த மனவருத்தமும், வேதனையும் அடைந்த, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை தோளூர்பட்டிக்குச் சென்று மவுலீஸ்வரனின் பெற்றோரையும், குடும்பத்தினரையும் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது முசிறி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தியாகராஜன் மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“