கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கட்டமுத்துபாளையத்தை சேர்ந்தவர் தீனதயாளன் இவரது மகன் வேலன் (18), இவர் நேற்று முன்தினம் இவரது நண்பர்களுடன் கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆற்றில் வீராணம் பாலம் அருகே மணல் எடுத்த 30 அடி ஆழ பள்ளத்தில் குளிக்க சென்றார். அப்போது நீரில் மூழ்கினார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு விரைந்த தீயணைப்புபடையினர் நீண்ட நேரம் தேடியும் வேலனை நேற்று முன்தினம் கண்டுபிடிக்க முடிய வில்லை. நேற்று இரண்டாவது நாளாக காலை 6 மணி முதல் தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/12/kandarakottai-4-2025-10-12-21-15-52.jpeg)
2வது நாள் காலை முதல் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால், ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் தேடுதல் பணியில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கடலூரில் இருந்து 2 ரப்பர் படகுகள் கொண்டுவரப்பட்டு தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/12/kandarakottai-3-2025-10-12-21-15-52.jpeg)
கடலூர் போலீஸ் எஸ்.பி. ஜெயகுமார், கோட்டாட்சியர் சுந்தர்ராஜன், டி.எஸ்.பி ராஜா, தாசில்தார் பிரகாஷ், காவல் ஆய்வாளர்கள் பாஸ்கரன், அசோகன், நந்தகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் முகாமிட்டு தீவிரமாக ஈடுபட்டனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/12/kandarakottai-2-2025-10-12-21-15-52.jpeg)
நேற்று காலை சென்னையில் இருந்து தமிழ்நாடு போலீஸ் பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பண்ருட்டி நிலைய தீயணைப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசரும் நீரில் மூழ்கி மாயமான சிறுவன் வேலனை தேடி வருகின்றனர்
செய்தி: பாபு ராஜேந்திரன்