/tamil-ie/media/media_files/uploads/2023/01/dmk-cadre.jpg)
நெல்லை மதபோதகர் மீது பெண் புகார்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையம் அருகே இளம்பெண் ஒருவர் உடலில் பலத்த தீக் காயங்களுடன் உயிருக்கு போராடினார்.
இதனை அங்கு சென்றவர்கள் பார்த்த நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இந்தத் தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், உயிருக்கு போராடிய இளம்பெண் பூஜா என்பதும், ராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரது காதலன் லோகேஷ் என்பவர் பூஜாவை பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததும், அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
பூஜா, லோகேஷை திருமணம் செய்ய வலியுறுத்தியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற போலீசார் லோகேஷை தேடினர். அப்போது அவர் உடல் நிலை சரியில்லை எனக் கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்று லோகேஷை கைது செய்த போலீசார், அவரது உடல் நிலை சரியில்லை என்பதால் மீண்டும் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண் பூஜாவுக்கு 90 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை பெட்ரோல் ஊற்றி காதலன் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.