scorecardresearch

’ தியாகராஜ பாகவதர் நாயக்கர்களை மகிழ்விக்க தெலுங்கில் பாடினார்’: காந்தராஜ் சர்ச்சை பேச்சு

பிராமிணர்கள் ஒட்டுண்ணிகள் போல வாழந்தனர் என்று மருத்துவர் கே. காந்தராஜ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

’ தியாகராஜ பாகவதர் நாயக்கர்களை மகிழ்விக்க தெலுங்கில் பாடினார்’: காந்தராஜ் சர்ச்சை பேச்சு

பிராமிணர்கள் ஒட்டுண்ணிகள் போல வாழந்தனர் என்று மருத்துவர் கே. காந்தராஜ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

யூடியூப் சேனலில் நடைபெறும் அரசியல் விவாதங்களில் திராவிட கொள்கை சார்பாக தொடர்ந்து  டாக்டர்  கே .காந்தராஜ்   பேசி வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பிராமணர் சமூகம் தொடர்பாக பேசிய கருத்து சர்ச்சை ஆகி உள்ளது. ” பிராமண சமூகம் நன்றாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த அச்சுறுதலும் இல்லை. வெள்ளைக்காரன் ஆட்சி செய்த போது அவரது காலை பிடித்து வாழ்ந்தார்கள். முகலாயர்கள் ஆட்சி செய்த போது அவர்கள் காலில் விழுந்து வாழ்க்கை நடத்தினார்கள். எல்லா இடத்திலும் மிகச்சிந்த அடிமைகளாக இருந்தார்கள். கர்நாடக சங்கீதத்தில்  தியாகராஜர், திருவையாறை சேர்ந்த பிராமணர். அப்போது நாயக்கர் ஆட்சி நடந்தது. நாயக்கர்கள் தெலுங்கு என்பதால் அவரை மகிழ்விக்கத்தான் , இவர் தெலுங்கு மொழில் பாடினார். பிராமணர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது. பிராமணர்கள் ஒட்டுண்ணிகள் ” என்று அவர் கூறினார்.

மேலும் இவரது கருத்துக்கு எதிராக  பாடகர் டி.எம் கிருஷ்ணா ட்வீட் செய்துள்ளார். “தியாகராஜர் பாகவதருக்கு எதிரான கருத்தியலில் பேசுவதும் இயங்குவதும் தவறில்லை. ஆனால் அதற்காக முட்டாள்த்தனமான விஷயங்களை பகிரக்கூடாது. பாகவதர் ஒரு தெலுங்கு பேசும் பிராமணர். அவருக்கும் நாயக்கர் ஆட்சிக்கும் தொடர்பு இல்லை. ’மராத்தாஸ்’ தான் அப்போது ஆட்சியில் இருந்தனர்” என்று அவர் கூறியுள்ளார்.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Brahmins are parasites dr kantharaj