சென்னை ஆர்.கே. நகரில் சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில், 'எளியோர் எழுச்சி நாள்' என்ற பெயரில் 48 ஜோடிகளுக்கு இலவச திருமணம் இன்று (17.11.2024) நடைபெற்றது.
இந்த நிகழ்சசியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தினார். அப்போது, சூர்யகுமார்- குணவதி என்ற மணமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுத்தார். தாலியை வாங்கிய மணமகளின் தாய், மணமகனிடம் கொடுக்காமல் ஒரு பதற்றத்தில் அவரே மணமகளுக்கு தாலி கட்டச் சென்றார்.
இதைப் பார்த்து ஷாக் ஆன உதயநிதி, "என்னம்மா நீங்க கட்டப்போறீங்க.. மாப்ளைக்கிட்ட கொடுங்க" என சிரித்தபடி கேட்டார். இதன் பின் துதாரித்த தாய் மணமகனிடம் கொடுத்து கட்டச் சொன்னார். இந்த நிகழ்வால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.
இதுகுறித்து பின்னர் தாயிடம் கேட்ட போது, ஒரு பதற்றத்தில் அவ்வாறு செய்தேன். உதயநிதியை பார்த்ததும் பதற்றம் ஏற்பட்டது. நீங்களே தாலி கட்டி பொண்ண கூட்டிட்டு போயிடுவீங்க போல என உதயநிதி சொன்னார் என்று கூறினார்.
இது தொடர்பாக மணமகனின் தாய் ஊடகங்களிடம் கூறுகையில், “கல்யாணத்தின்போது எனக்கு ஒன்னும் புரியவில்லை. அவர் (உதயநிதி) தாலி கொடுக்கும்போது நாம்தான் கட்ட வேண்டும் என்று கட்ட சென்றேன். அதற்கு அவர், என்னம்மா, நீயே தாலி கட்டி பொண்ண கூட்டிக்கொண்டு போய்விடுவ போலிருக்கே, அனுப்புற மாதிரி இல்லை போலிருக்கே என்றார். அதற்கு நான், சார் உங்களை பார்த்த உடனே அந்த சந்தோஷத்தில் ஒன்னும் பண்ண முடியல சார் என்றேன். அவர் சரி சரி மாப்பிள்ளைகிட்ட கொடுத்து கட்டுமா என்றார். சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“