கோவை மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மேம்பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையிலும், மேம்பாலத்திற்கு கீழே போக்குவரத்து வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது மேம்பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காரின் முன்புறம் பலத்த சேதமடைந்தது. எனினும், நல்வாய்ப்பாக காரில் பயணித்தவர்களுக்கும், சாலையில் சென்று கொண்டிருந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்நிலையில், சேதமடைந்த காரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“