பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கு : மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கின் தீர்ப்பு LIVE UPDATES

மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் பதவி வகித்தபோது, சன் குழுமத்துக்காக பிஎஸ்என்எல் அதிவேக இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அவரது சகோதரர் கலாநிதி மாறன், சென்னை பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர் கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப்பொதுமேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலெக்ட்ரீஷியன் ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 7 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி 7 பேர் சார்பிலும் சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2017 அக்டோபரில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை சிபிஐ 14-வது சிறப்பு நீதிபதி நடராஜன் முன்பாக நடந்து வந்தது. மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி டெல்லி மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். ஆனால் சிபிஐ தரப்பில் இதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 7 பேரும் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு மார்ச் 14-ம் தேதி பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இன்று இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகிறது. அதன் Live Updates இங்கே,

பிற்பகல் 02.20 – கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட 7 பேரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பிற்பகல் 02.30 – பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை.

More Details Awaited…

×Close
×Close