Advertisment

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எல்லாக் கட்சிகளிலும் இருப்பவர்களுக்கு தொடர்பு: பா. ரஞ்சித் அதிர்ச்சி

ஆட்சி, அதிகாரிகளுக்கு சரியான அதிகாரம் கொடுத்து இந்தமாதிரி பிரச்னைகளை சட்டரீதியாக, நிர்வாக ரீதியாக தடுப்பதற்கான நடவடிக்கைகளை வேலைகளை அரசு செய்ய வேண்டும்.

author-image
WebDesk
New Update
Rajinth Armstrong

Bsp Armstrong Murder case

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52), சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் உள்ள தனது வீட்டின்முன்பு கடந்த 5 ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Advertisment

இதுதொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியை சேர்ந்த பொன்னை பாலு (39), குன்றத்தூர் திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர்.

கைதான 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிய திருவேங்கடம் கடந்த 14 ஆம் தேதி போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை வழக்கில் சிக்கியவர்களில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதால், அனைத்து கோணங்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிரான பல்வேறு குழுக்கள் ஒருங்கிணைந்து இந்த படுகொலை திட்டத்தை செயல்படுத்தி உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தின் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி இணை செயலாளராக இருந்த மலர்கொடி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவரை கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதேபோல, தமாகா மாநில மாணவர் அணி துணை தலைவர் பதவியில் இருந்து ஏற்கெனவே நீக்கப்பட்ட ஹரிஹரன், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். அதேபோல் பாஜக பெண் நிர்வாகி அஞ்சலை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதுப்புது நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவருவது அதிர்ச்சியளிக்கிறது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், ’இதற்கு முன் இருந்த அதிமுக ஆட்சியில் தலித்துகளின் பிரச்னை தீர்ந்தபாடில்லை. அப்போது எதிர்க் கட்சியாக இருந்த திமுக அரசு அதிமுக ஆட்சியை கடுமையாக  எதிர்த்தது. ஆனால் அதே திமுக ஆட்சி மீண்டும் வரும்போது திரும்பவும் தலித்துகள் தாக்கப்படுவது, அவர்களின் பிரச்னைகள் இரண்டாம் தரமாக பார்க்கப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருப்பதில் எங்களுக்கு மிகப்பெரிய விமர்சனம் இருக்கிறது.

அரசு என்பதே ஆட்சி, அதிகாரிகளால் இயக்கப்படுவது தான். ஆட்சி, அதிகாரிகளுக்கு இங்கு சரியான அதிகாரம் இருக்கிறதா அல்லது அரசியல் ரீதியான ஆட்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதே இங்கு கேள்விக்குறியாக உள்ளது.

ஆட்சி, அதிகாரிகளுக்கு சரியான அதிகாரம் கொடுத்து இந்தமாதிரி பிரச்னைகளை சட்டரீதியாக, நிர்வாக ரீதியாக தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு செய்ய  வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதுப்புது நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவருவது அதிர்ச்சியளிக்கிறது. விசாரணை சரியாக நடக்க வேண்டும் என்பது தான் எங்களின் நம்பிக்கை. எல்லாக் கட்சிகளிலும் இருப்பவர்கள் இந்த இந்த படுகொலையில் சம்பந்தபட்டிருக்கிறார்கள், என்று ரஞ்சித் பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment