சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் என்ன, கொலைக்கான பின்னணிஎன்ன என்று போலீஸ் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முக்கிய தலித் தலைவராக வலம் வந்தார். தலித் அரசியல் மேடைகளில், போராட்டங்களில், பௌத்த நிகழ்வுகளில் அம்பேத்கரிய அரசியலை தீவிரமாகப் பேசி வந்தவர் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வீடு சென்னை பெரம்பூரில் உள்ளது வெள்ளிக்கிழமை (ஜூலை 50 ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த வீரமணி மற்றும் பாலாஜி ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வீரமணிக்கு வலது காதில் 17 தையல்களும், முதுகில் 9 தையல்களும் போடப்பட்டுள்ளது. பாலாஜி என்பவருக்கு காலில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் முக்கிய தலித் தலைவராக வலம் வந்த ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிப் படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட இடத்தில் 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், கொலையாளிகள், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களை போல் உடை அணிந்து கொண்டு வெட்டியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை 5 தனிப்படை அமைத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன, ஆம்ஸ்ட்ராங் கொலை ஏன் நடந்தது, கொலைக்கான பின்னணி என்ன என்று போலீசார் துருத்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா, வி.சி.க எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் மற்றும் தலித் தலைவர்கள், அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“