பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சட்டம், ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக பதவி வகித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பர் பகுதியில் உள்ள செம்பியம் பகுதியில் வசித்து வந்தார். நேற்று (ஜூலை 5) இரவு 7.30 மணியளவில் வழக்கம் போல் தனது வீட்டின் முன் நின்றபடி ஆதரவாளர்களுடன் பேசி கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென அங்கு 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக தாக்கி வெட்டிவிட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்து கேட்டு அவரது நண்பரும், இயக்குநருமான பா.ரஞ்சித் கதறி அழுதார். மருத்துவமனை வளாகத்தில் நின்றபடி பா.ரஞ்சித் தலையில் அடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதார்.
இயக்குநர் பா.ரஞ்சித், பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடன் நெருங்கிய நட்பும் அன்பும் கொண்டவர். அவரின் பல கூட்டங்களில் ரஞ்சித் கலந்து கொண்டு பேசியுள்ளார். பா.ரஞ்சித் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், முக்கியமான அரசியல் கட்சி பிரபலம் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் பொழுதே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“