நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழக பட்ஜெட் 2025 - 26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கல்வி சார்ந்து முக்கிய அறிவிப்புகளும் திட்டங்கள் குறித்தும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
education budget

கல்வி சார்ந்த பட்ஜெட் அறிவிப்புகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2025 -26: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 -26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (மார்ச் 14) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் காலை 9.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

Advertisment

திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் மற்றும் தங்கம் தென்னரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது பட்ஜெட்டாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் கல்வி சார்ந்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

காலை உணவு திட்டம்:

அதன்படி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் ரூ. 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தால் மாணவர்களின் வருகை மற்றும் ஊட்டச்சத்து அதிகரித்துள்ளது. நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவு செய்யப்படும். பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

தரம் உயர்த்தப்படும் பள்ளிகள்: 

பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழங்குடி மாணவர்களின் கல்வி மேம்படும். 

கல்வி நிதி: 

அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,760 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.83 கோடியில் புதிய குழந்தை மையங்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் 2,000 அரசுப் பள்ளிகளில் ரூ.160 கோடியில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டம் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்ந்த அறிவிப்புகள்:

நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும். பள்ளிக்கல்வியில் சதுரங்க ஆட்டத்தை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும். 

அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும். ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் படைப்பகம்:

சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Education Tamil Nadu Budget

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: