திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது
Advertisment
இதில், திருப்பத்தூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடி கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல் பரிசு ரூ. 75,000 இரண்டாவது பரிசு ரூ.50,000 மூன்றாவது பரிசு ரூ.35,000 என மொத்தம் 31 பரிசுகள் வழங்கப்பட்டது.
Advertisment
Advertisements
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஜோலார்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் சத்யா சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, வட்டாட்சியர் சிவபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் காவல்துறை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 5000க்கும் மேற்பட்ட காளையர்கள் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“