சென்னை, மேற்கு தாம்பரம் மீனாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி ப்ரியா, மகன் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று அவர்கள் வீட்டில் இருந்த போது தீடிரென கண்ணாடி உடைந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது, துப்பாக்கி குண்டு பாய்ந்து கண்ணாடி உடைந்தது என்பது தெரியவந்தது.
இதைப்பார்த்து அதிச்சியடைந்த தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடய அறிவியல் நிபுணர்களும் வரச் சொல்லி விசாரணை நடத்தினர்.
இந்த குண்டு எங்கிருந்து வந்தது? எந்த மாதிரியான துப்பக்கியிலிருந்து வந்தது?, குண்டு எந்த வகையைச் சேர்ந்தது என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த குண்டு ஏகே 47 ரகத் துப்பாக்கி குண்டாக இருக்கலாம் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“