coimbatore: பல தங்க நகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 25 கிலோ எடையிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில், சம்பவ இடத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையர் தலைமையில் போலீசார் தீவிர விடாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய் உதவியுடனும் தடயவியல் சோதனை நிபுணர்களுடனும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவு நேரத்தில் ஏசி வெண்டிலேட்டர் கழட்டி உள்ளே புகுந்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை போயிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கோவையின் முன்னணி நகைக்கடையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் நகை வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“