பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் வழியாக கிளை கிராமங்களுக்கும், சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கும் தமிழக அரசு சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்துகள் பழுதடைந்தாலோ அல்லது தவிர்க்க முடியாத காரணங்களாலோ ஸ்பேர் பஸ் என்று அழைக்கப்படும் மாற்றுப் பேருந்துகள் தமிழக போக்குவரத்து கழகத்தால் குறிப்பிட்ட வழிதடத்தில் இயக்கப்படும். இந்நிலையில் ஆனைமலை, மயிலாடுதுறை, பொங்காளியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 29ம் எண் கொண்ட மாற்று பேருந்து, கோட்டூர் வழித்தடத்தில் சென்றது.
மதுரைக்கு செல்லும் பேருந்தின் முகப்பில் மாற்று வழித்தடத்தில் பெயர் பலகையை மாற்றி அரசு ஊழியர்கள் இயக்கி வந்தனர். இந்நிலையில் பேருந்து முகப்பில் இருந்த பெயர் பலகை பேருந்தில் அதிர்வுகளால் கீழே இறங்கியது.
இதனை பேருந்து ஊழியர்கள் கவனிக்கவில்லை. இந்நிலையில் தென் சங்கம்பாளையம் வழியாக வந்த அரசு பேருந்து மதுரை என குறிப்பிடப்பட்டிருந்ததால் அங்கு பேருந்துக்கு காத்திருந்த நபர்கள் தாங்கள் எதிர்பார்த்து இருந்த பேருந்து இல்லை என கவனக்குறைவாக இருந்துள்ளனர்.
இதனால் அவ்வழியாக வந்த பேருந்து கடந்து சென்றுள்ளது. இது குறித்து அங்கிருந்தவர்கள் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து ஊழியர்கள் பேருந்தின் முகப்பு பலகையை சரியாக பொருத்தினர்.கோட்டூர் வழித்தடத்தில் மதுரை பேருந்து வந்ததால் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். குறிப்பாக வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரு சில மாற்று பேருந்துகள் மாறி மாறி வருவதால் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“