பஸ் ஸ்டிரைக்கை வாபஸ் பெற ஐகோர்ட் வேண்டுகோள் : பேச்சுவார்த்தை மத்தியஸ்தராக நீதிபதி பத்மநாபன் நியமனம்

பஸ் ஸ்டிரைக், தமிழ்நாடு முழுவதும் மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கியது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற விசாரணை இங்கே தரப்படுகிறது.

பஸ் ஸ்டிரைக், தமிழ்நாடு முழுவதும் மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கியது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற விசாரணை  இங்கே தரப்படுகிறது.

பஸ் ஸ்டிரைக், ஜனவரி 4-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர இந்தியன் மக்கள் மன்றத்தை சேர்ந்த வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தி வழக்கு தொடர்ந்தார்.

பஸ் ஸ்டிரைக் தொடர்பான இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (ஜனவரி 10) விசாரணைக்கு வந்தது. அரசு ஒப்பந்தப்படியான 2.44 மடங்கு காரணி அடிப்படையிலான ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களுக்கான ரூ 750 கோடி நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை ஆகியவை அரசுத் தரப்பில் உறுதிமொழிகளாக வழங்கப்பட்டன.

பஸ் ஸ்டிரைக் காரணமாக பொங்கல் பண்டிகை நேரத்தில் மக்கள் படும் இன்னலை கருத்தில் கொண்டு, வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள் கைவிட வேண்டும் என நீதிபதிகள் வேண்டுகோள் வைத்தனர். இது குறித்து இரவுக்குள் யோசித்து இன்று(11-ம் தேதி) பதில் தெரிவிக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

பஸ் ஸ்டிரைக் வழக்கு இன்று பகல் 11.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை மத்தியஸ்தர் மூலமாக நடத்த வேண்டும் என தொழிற்சங்கம் தரப்பு வழக்கறிஞர் பிரகாஷ் கோரிக்கை வைத்தார். ‘மனசாட்சிப்படி முடிவெடுக்க கோட்டிருந்தோமே, ஏதாவது பதில் உண்டா?’ என தொழிற்சங்க தரப்பினரிடம் நீதிபதி கேட்டார். தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை தொடர்பாக அரசிடம் கேட்டுச் சொல்வதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதைத் தொடர்ந்து விசாரணையை இன்று (11-ம் தேதி) பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

பிற்பகல் விசாரணை LIVE UPDATES

மாலை 5.20 : ‘0.13 மடங்கு வித்தியாசம் குறித்து நீதிபதி இ.பத்மநாபன் முடிவு செய்வார். பணிக்கு திரும்ப வேண்டும். இதுவே நீதிமன்ற விருப்பம்’ – நீதிபதிகள் உத்தரவு.

மாலை 5.15 : ‘சமரசம் தீர்வு காண ஓய்வு பெற நீதிபதி பத்மநாபன் நியமனம்’ – உயர்நீதிமன்றம் உத்தரவு.

மாலை 5.05 : நீதிபதிகள் உத்தரவிட தொடங்கினர். ‘ஊதிய ஒப்பந்த காரணி 2.44 மடங்கா அல்லது 2.57 மடங்கா என மத்தியஸ்தர் முடிவு செய்வார்’ – நீதிபதிகள்

மாலை 4.15 : ‘நீதிமன்றங்களுக்கு துணிவு இருக்கின்றதா? என தொழில் சங்கத்தினர் பேசிவருகின்றனர். வார்த்தையை கவனித்து பேசவேண்டும்’ – நீதிபதிகள்

மாலை 4.12 : ‘விபத்துக்கள் முலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் 700 கோடி இழப்பு வழங்க வேண்டும். இந்த இழப்பிற்கு யார் காரணம்?’ – நீதிபதிகள்.

‘ஓட்டை பேருந்தை அரசு கொடுத்தால் விபத்துக்கள் தான் ஏற்படும்’ – தொழிற் சங்கம்

மாலை 4.10 : ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகையை பெற கடந்த 7 ஆண்டுகளாக சங்கங்கள் என்ன செய்தன? என நீதிபதிகள் கேள்வி விடுத்தனர். 5000 கோடி வழங்க வேண்டும் என்ற தொழில்சங்க தரப்புக்கு நீதிபதிகள் அந்தக் கேள்வியை முன் வைத்தனர்.

மாலை 4.07 : ‘போராட்டம் என்பது ஊதிய உயர்வுக்கு மட்டும் கிடையாது, நிலுவை தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட மற்ற கோரிக்கைகளுக்கும் சேர்த்து தான்’ என்று வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் தரப்பு வாதம் செய்தனர்.

மாலை 4.05 : இடைக்காலமாக 2.44 மடங்கு சம்பள உயர்வுக்கு ஒத்துக் கொண்டு சமரச பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். ‘இல்லை என்றால் வழக்கை நாளைக்கு தள்ளிவைக்கிறோம். அப்போது விரிவான வாதங்களை கேட்கிறோம்’ என நீதிபதிகள் கூறினர்.

மாலை 4.00 : ‘ஊழியர்கள் நலனுக்காக மத்தியஸ்தர் நியமிக்க அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. பொது நலனை பார்க்க வேண்டும்’ என நீதிபதிகள் கருத்து கூறினர்.

மாலை 3.55 : அரசு பிரச்சனைகளில் பின்னோக்கி செல்லவே விரும்புகின்றது – தொழிற் சங்க தரப்பு. மத்தியஸ்தம் செய்ய உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலீபுல்லாவை நியமிக்கலாம் என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் குறிப்பிட்டார்.

மாலை 3.55 : மக்கள் பாதிப்பை மட்டுமே முதன்மையாக கருத்தில் கொண்டு நீதிமன்றம் செயல்படுகின்றது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். தொழில் சங்கத்திற்கு மக்கள் பிரச்சினைகள் புரியவில்லையா? என்றும் நீதிபதிகள் கேட்டனர். பொதுமக்கள் படும் பிரச்சினைகளை தொழில் சங்கத்தினர் கருத்தில் கொள்ளவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மாலை 3.50 : ஊதிய உயர்வு 2.44 சதவீதம் வழங்க வேண்டுமா அல்லது 2.57 சதவீதம் வழங்க வேண்டுமா என்பதை மத்தியஸ்தர் முடிவு செய்வார். 2.57 என முடிவு செய்தால் 2.44 சதவீத உயர்வு தன்னிச்சையாக காலாவதியாகிவிடும். அதனால் கடந்த 4 ஆம் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டியதில்லை என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

மாலை 3.40 : அரசு தரப்பில், ‘சமரச பேச்சுவார்த்தையின் போது ஊதிய உயர்வு தொடர்பான 2.44 மடங்கு குறித்தும், 2.57 மடங்கு குறித்தும் விவாதிக்கப்படும்’ என கூறப்பட்டது.

மாலை 3.35 : ஊதிய உயர்வு மட்டுமல்லாமல் எல்லா கோரிக்கைகளும் சமரச பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட வேண்டும் என சி ஐ டி யூ தொழிற்சங்கம் சார்பில் வாதம்

மாலை 3.30 : அரசு தரப்பில் 2.44 காரணி அமல்படுத்தப்பட்டதை அல்லது செயல்படுத்தப்பட்டதை மத்தியஸ்தர் முடிவு செய்ய வேண்டும் – யூனியன் தரப்பு

மாலை 3.25 : பேச்சுவார்த்தையில் எதைபற்றி பேசுவது என்பதை நீதிமன்றம் முடிவு செய்யவேண்டும் என தொழிற்சங்கம் தரப்பில் கோரிக்கை.

மாலை 3.20 : மத்தியஸ்தம் செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.என். பாஷா, பி. சண்முகம், அல்லது முன்னாள் தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் ஆகியோரில் ஒருவரை நியமிக்கப்பட்ட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் தரப்பில் கோரிக்கை.

மாலை 3.15 : தொழில் சங்கம் தரப்பு – மத்தியஸ்தம் என்பதில் எதை பற்றி பேசுவது? ஏற்கனவே வர வேண்டிய தொகையை பற்றி மட்டுமே பேசுவதா?

மாலை 3.10 : போராட்ட காலத்திற்கு ஊதியம் வழங்க முடியாது என அரசு பதில் தெரிவித்தது. போராட்டத்தில் போது தொழிலாளர்கள்களுக்கு எதிராக பதிவு செய்த வழக்கை திரும்ப பெற முடியாது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

மாலை 3.00: தற்போதைய நிலையில் தொழில் சங்கத்தின் நிலை என்ன? என நீதிபதிகள் கேட்டனர். அரசுத் தரப்பில், பேச்சுவார்த்தையை ஏற்கிறோம். ஆனால் ஊதிய விகிதம் உள்ளிட்ட மற்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

மாலை 2.45 : மத்தியஸ்தம் செய்ய ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கைக்கு அரசு ஒப்புதல் கொடுத்தது. ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க சம்மதம் தெரிவித்தது.

மாலை 2.30 : போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. அரசு பதில் மனு தாக்கல்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close