Advertisment

எம்.ஏ.எம் ராமசாமி வளர்ப்பு மகன் பிரச்னை: ஏ.சி முத்தையா மனு தள்ளுபடி

மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்து தொழிலதிபர் ஏ.சி.முத்தையா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MAM Ramasamy Heirship, MAM Ramasamy, எம்.ஏ.எம்.ராமசாமி, வாரிசு சான்றிதழ், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, சென்னை உயர் நீதிமன்றம், MAM Ramasamy, Heirship certificate, businessman A.C. Muthiah's, Madras High Court

மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்து தொழிலதிபர் ஏ.சி.முத்தையா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த 2016-ம் ஆம் ஆண்டு, செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் டாக்டர்.ஏ.சி முத்தையா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”எம்.ஏ.எம். ராமசாமியின் தந்தையும் எனது தந்தையும் சகோதரர்களும் நாங்கள் நாட்டுகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். எம்.ஏ.எம். ராமசாமி கடந்த 1996-ம் ஆண்டு ஐயப்பன் என்பவரை தத்து எடுத்துக்கொண்டார்.

ஐயப்பன் என்பவரை தத்தெடுத்தது நகரத்தார் சமூகத்தின் கட்டுப்பாடான பழக்கவழக்கங்களுக்கு எதிரானது. சமூகத்தின் எதிர்ப்புகளை மீறி ஐயப்பன் தத்து எடுக்கப்பட்டார்.

ஐயப்பன் சட்டவிதிகளுக்கு மாறாக தத்து எடுக்கப்பட்ட நிலையில் வளர்ப்பு மகன் அந்தஸ்தில் இருந்துகொண்டு, ஐயப்பன் தனது பதவியை துஷ்பிரோயகம் செய்து, எம்.ஏ.எம் ராமசாமியை செட்டிநாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். தொடர்ந்து அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை அபகரித்துகொண்டார்.

மேலும், எம்.ஏ.எம்.ராமசாமி தனது உயிலை பதிவு செய்யும்போது தனது அசையும் அசையா சொத்துகளை செட்டிநாடு அறக்கட்டளைக்கே எழுதிவைத்ததால், அவரை ஐயப்பன் முறையாக நடத்தவில்லை என்பது தெரிகிறது.

எம்.ஏ.எம் ராமசாமி உயிருடன் இருந்த காலத்தில், ஐயப்பன் அவருக்கு துரோகம் செய்ததோடு, மயிலாப்பூர் தாசில்தார் முன்பு வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். இதற்கு நானும் டாக்டர் மீனா முத்தையா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தோம். எங்களுடைய எதிர்ப்பையும் மீறி அவருக்கு மயிலாப்பூர் தாசில்தார் வாரிசு சான்றிதழ் வழங்கியுள்ளார். எனவே, அவருக்கு வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழை ரத்து செய்யவேண்டும் என்று ஏ.சி. முத்தையா குறிப்பிட்டிருதார்.

ஏ.சி. முத்தையாவின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் மயிலாப்பூர் தாசில்தார் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், வளர்ப்பு மகனான ஐயப்பன் சார்பில் வாரிசு சான்றிதழ் கேட்டு உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு உள்ளதா என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏ.சி.முத்தையா மற்றும் மீனா முத்தையா சார்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களுடைய தரப்பில் வழக்கறிஞர் மூலம் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. எதிர்ப்பு மனுவில் தத்து எடுத்ததை எம்.ஏ.எம் ராமாமி ரத்து செய்து விட்டதாக கூறினாலும் அதற்கான ஆணவத்தை தாக்கல் செய்யவில்லை. எனவே, அனைத்து ஆவணங்களையும் தீவிரமாக பரீசிலித்த பின்னரே ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

எம்.ஏ.எம் ராமசாமி வளர்ப்பு மகன் தொடர்பான பிரச்னையில்,ம் வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து ஏ.சி. முத்தையா தொடர்ந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சதீஷ்குமார் முன்பு வந்தது. அப்போது, மயிலாப்பூர் தாசில்தார் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அருண், வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு தாசில்தாருக்கு முழு அதிகாரம் உள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஏ.சி.முத்தையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai High Court Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment