தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஐஜி பொன் மாணிக்கவேல் அதிரடி :
கடந்த 27 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் வீட்டில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். கடந்த 3 நாட்களாக நடைப்பெற்ற இந்த சோதனையில் 5 ஐம்பொன் சிலைகள், 12 உலோகச் சிலைகள், 22 கல்தூண்கள் என மொத்தம் 89 சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட அனைத்து சிலைகளும் தொன்மை வாய்ந்த நூற்றாண்டு சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் நடத்திய அதிரடி சோதனையில் கடந்த 3 மாதத்தில் மட்டும் தமிழக கோயில்களில் இருந்து காணாமல் போன சிலைகள் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி சைதாப்பேட்டையிலுள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து நூற்றாண்டுகளை கடந்த, தொன்மையான சிலைகள் கைப்பற்றப்பட்டன.
தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் கும்பகோணம் எடுத்துச்செல்லப்பட்டது. வீட்டில் 21 தூண்களும், 7 பெரிய சிலைகளும் இருந்ததாகவும் அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் இன்று தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டிலும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈட்டுப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு அருகே, மேல்மருவத்தூரிலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள மொகல்வாடி கிராமத்தில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில், 50க்கும் மேற்பட்ட பழங்கால கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது