சேகர் ரெட்டி வழங்கிய ரூ1 கோடி: உதயநிதி ஃபிரேமில் வந்தது ஏன்?

CM MK stalin Meet Sekar Reddy : தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தடுப்பு நடவடிக்கைக்காக தொழிலதிபர் சேகர் ரெட்டி ஒரு கோடி நிதி வழங்கியுள்ளார்.

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிர தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டு வரும்நிலையில், அனைத்து மாநிலங்களிலும், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த ஏப்ரல் 10-ந் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தடுத்தல் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நிதி தேவைப்படுவதால், முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கை ஏற்ஞ பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரபமுகர்கள், மற்றும் திரைத்துறை நட்சத்திரங்கள் என அனைவரும் கொரோனா நிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த ஜேஎஸ்ஆர்ஐடிபிஎல் நிறுவனத்தின் தலைவர் ஜெ.சேகர் ரெட்டி ஒரு கோடி மதிப்பிலான காசோலையை கொரோனா நிதியாக வழங்கினார். இந்த நன்கொடை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், இந்த புகைப்படத்தில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்றுள்ளது பலரையும் ஆச்சாரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த்தாக சர்ச்சையில் சிக்கிய ஜெ.சேகர் ரெட்டி தற்போது கொரோனா நிதி வழங்கியுள்ளார். அவசர தேவைக்கான நிதி யார் வேண்டுமானாலும் வழங்கலாம் என்றாலும், அருகில் உதயநிதி ஸ்டாலின் உள்ளது பெரும் சந்தேக கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜெ.சேகர் நிதி அளிப்பது குறித்து உதயநிதி ஆர்வத்துடன் இருந்தாரா? அல்லது உதயநிதி கூறியதன் பேரில் ஜெ.சேகர் ரெட்டி நிதி வழங்கினாரா என்பது குறித்து பலரும் பலவிதமாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Businessman sekar reddy donates one crores for covid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com