சி.பி. ராதாகிருஷ்ணன் பாதுகாப்பு வளையத்தில் அத்துமீறல்: இருவர் மீது கஞ்சா வழக்கு- கோவையில் பா.ஜ.க.வினர் போராட்டம்

அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் கரும்பக்கடைப் பகுதியைச் சேர்ந்த அனீஸ் மற்றும் ஆசிக் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த இருவர் மீதும் ஏற்கெனவே கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-10-28 at 6.43.26 PM

Coimbatore

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை விமானம் மூலம் வருகை புரிந்தார்.

Advertisment

கோவை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் மற்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே, துணை ஜனாதிபதி வாகனங்கள் சென்ற சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவர் அங்கும் இங்கும் சென்றுள்ளனர். இதனால் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதாகக் கூறி பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் கரும்பக்கடைப் பகுதியைச் சேர்ந்த அனீஸ் மற்றும் ஆசிக் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த இருவர் மீதும் ஏற்கெனவே கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

Advertisment
Advertisements

சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்களையும் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து:

துணை ஜனாதிபதி முதலில் கொடிசியா வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்று தொழில்துறையினருடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசுகையில், "துணை ஜனாதிபதி பதவி எனக்குக் கிடைத்த தனிப்பட்ட மரியாதை அல்ல. இது உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும், கொங்கு மண்ணுக்கும், கோவை மாநகரத்திற்கும் கிடைத்த பெருமை" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பேரூர் ஆதீனம் நூற்றாண்டு விழா:

பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் நடைபெற்ற பேரூர் ஆதீனம் நூற்றாண்டு விழா புகழரங்கம் நிகழ்ச்சியில் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து சிறப்பித்தார்.

விழாவில் அவர் பேசுகையில், "ஆன்மீகம் தழைத்தோங்கினால் தான் மகத்தான சமுதாயம் உருவாக முடியும். பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை; நடுநிலையோடு ஆன்மீகப் பாதையில் பேரூர் ஆதீனம் சென்று வருகிறது. பிரதமர் மோடி கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு அவரது முறையான திட்டமிடலும், ஆன்மீக சிந்தனையும்தான் காரணம்" என்று கூறினார்.

பாதுகாப்பு சர்ச்சை குறித்துப் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன், "எனது பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை; கோவை மக்கள்தான் எனக்குப் பாதுகாப்பு" என்று தெரிவித்தார்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: