Advertisment

'சுபஸ்ரீ மரணத்தில் காற்றின் மீது தான் வழக்குப் போடணும்' - பொன்னையன் கருத்தால் சர்ச்சை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
c ponnaiyan shocking statement about subha sri banner accident - 'சுபஸ்ரீ மரணத்தில் காற்றின் மீது தான் வழக்குப் போடணும்' - முன்னாள் அமைச்சர் பொன்னையன்

பேனர் விபத்தால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும் என, அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனுமதியின்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை, கிருஷ்ணகிரியில் வைத்து போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பொன்னையன் சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அப்போது செய்தியாளர், இந்தியப் பிரதமர் - சீன அதிபர் சந்திப்புக்காக பேனர்கள் வைக்க தமிழக அரசு முனைவதற்கு விளம்பர மோகமே காரணம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்துக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பொன்னையன், "இந்த விவகாரத்தில் ஸ்டாலினுக்கு என்ன வயிற்றெரிச்சல்? இந்தியப் பிரதமர் - சீன அதிபர் இருவரும் இரு நாட்டு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்காக சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பை ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார். ஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகமும் தெரியவில்லை, அரசியல் ஞானமும் இல்லை. பேனர் கலாச்சாரம் ஏற்கெனவே இருக்கிறது. கருணாநிதியும் அதனைக் கடைபிடித்தார். ஸ்டாலினும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்," எனத் தெரிவித்தார்.

அப்போது, சுபஸ்ரீ மரணத்துக்குப் பிறகு பேனர்கள் வைப்பது, மக்கள் மத்தியில் அதிமுக மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தாதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "ஸ்டாலின் பொய் சொல்கிறார், பெரிதுபடுத்துகிறார் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். அப்பெண் வண்டியில் செல்லும் போது, காற்று வீசியதால் பேனர் விழுந்தது. பேனர் வைத்தவரா அதனை தள்ளிவிட்டுக் கொன்றார்? இல்லை. இந்தப் பிரச்சனையில் வழக்கு தொடுக்க வேண்டும் என்றால், காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும்," என பொன்னையன் தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு சமூக தளங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

5, 2019

5, 2019

5, 2019

5, 2019

பலரும் பொன்னையனின் கருத்துக்கு கடும் எதிர்வினை ஆற்றியுள்ளனர்..

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment