அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், பாஜக- திமுக கூட்டணி வைத்துகொள்ளப்போவதாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பொதுக்கூட்டத்தில் பேசியபோது “''பிற மாநிலங்களில் நிலங்களைக் கையகப்படுத்திய மத்திய அரசு உரிய இழப்பீடு கொடுத்துவிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் இழப்பீடு கொடுக்காமல் வஞ்சிக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - திமுக இடையே கூட்டணி ஏற்படும்” என்று அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை “ நான் பாஜக அலுவகத்திற்கு செல்லவில்லை. அதனால் சி.வி. சண்முகம் பாஜகவில் சேர்ந்துள்ளார் என்பது எனக்கு தெரியாது. மேலும் திமுக அல்லது பாஜகவின் அதிகாரப்பூர்வ தலைவர்கள் கூட்டணி தொடர்பாக பேச வேண்டும். அதை தவிர்த்துவிட்டு யார் பேசினாலும் அது யூகம்தான். அதற்கு பதிலளிக்க முடியாது “ என்று அவர் கூறியுள்ளார்.