தடையை மீறி இஸ்லாமிய அமைப்பினர் தலைமைச் செயலகம் அருகே இன்று முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ள நிலையில் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டசபை முற்றுகை பேரணி லைவ் - ஆங்கிலத்தில் படிக்க
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பின. இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபை முற்றுகை போராட்டம் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்தன. இந்த முற்றுகை போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டதுடன், மனு தொடர்பாக வரும் 11ந்தேதி பதிலளிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Anti caa protest upadtes : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்த செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இரண்டு பேர் கொண்ட மத்தியஸ்த குழு புதன்கிழமை டெல்லியின் ஷாஹீன் பாக் நகரை அடைந்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களை சந்தித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
வக்கீல்கள் சஞ்சய் ஹெக்டே மற்றும் சாதனா ராமச்சந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தால் இரண்டு நாட்களுக்கு முன்பு மத்தியஸ்தர்களாக நியமிக்கப்பட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக்கட்சிகள் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகள் அடங்கிய மனுவை, டில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் திமுக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் வழங்கினர். டி.ஆர். பாலு, கனிமொழி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்றனர்.
சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கலைவாணர் அரங்கம் பகுதியிலிருந்து பேரணியை துவங்கிய இஸ்லாமியர்கள், சேப்பாக்கத்தில் தங்கள் பேரணி மற்றும் போராட்டத்தை நிறைவு செய்தனர். 2 மணிநேரத்திற்கும் மேல் இந்த பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்ற தடை காரணமாக, சட்டசபை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து கடலூர், மதுரை , கோவையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பேரணி நடத்தி வருகின்றனர். கோவை உக்கடம் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக நடந்து வருகின்றனர்.
சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் எங்கும் இஸ்லாமிய அமைப்புகள் இன்று போராட்டம், பேரணி உள்ளிட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளன. மதுரை மற்றும் கடலூர் பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பெரும்பரபரப்பு நிலவிவருகிறது.
குடியுரிமை சட்டத்திருத்த்துக்கு எதிராக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 600 போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசியக்கொடி ஏந்தி அமைதியான முறையில் வரம்பு மீறாத வகையில் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜா முகைதீன் தெரிவித்து உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights