CAA Protest at Chennai : குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மூன்றுக்கும் எதிராக தமிழக அரசு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
நேற்று பகல் 2 மணிக்கு போராட்டம் தொடங்கியது. அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
ஐந்து மணி நேரத்தை தாண்டி இரவிலும் போராட்டம் தொடர்ந்த நிலையில், அதனை முடித்துக் கொள்ளுமாறு போலீஸ் அதிகாரிகள் கேட்டனர். ஆனால் கலைந்து செல்ல மறுத்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை கைது செய்த காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். ஆனாலும் பெண்கள் நள்ளிரவிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கைதானவர்களை விடுவிப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அறிவித்தார்.
வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியைக் கண்டித்து சென்னையின் புறநகர் மட்டுமின்றி, மதுரை, கோவை, ஈரோடு,உதகமண்டலம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு போராட்டம் நடைபெற்றது.
பின்னர்வ் இன்றும் அவர்களின் போராட்டம் தொடருகிறது.
போராட்டத்தில் முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்
கூட்டம் கூட்டமாக திரண்டிருக்கும் பெண்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்
நேற்றிரவு போலீஸார் நடத்திய தடியடி