CAA Protest IIT Madras German student Told to exit India : சி.ஏ.ஏ-வுக்கு எதிராக பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை ஐ.ஐ.டியில் அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார் ஜெர்மனியை சேர்ந்த மாணவர் ஒருவர். அவர் கையில் வைத்திருந்த பதாகையில் ”அன்று நாங்கள் அங்கிருந்தோம்” ( “1933 to 1945; We Have Been There”) என நாஜி ஆட்சியை குறிக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
It is learnt that Jakob Lindenthal, an exchange student at @iitmadras, from Dresden Germany, is asked to leave India asap. Recently he joined #CAA_NRCProtests in Chennai. pic.twitter.com/ZeS8h6ibfR
— Jinoy Jose Palathingal (@jinoyjosep) December 23, 2019
ஐ.ஐ.டி சென்னையில் இயற்பியல் துறையில் முதுநிலை அறிவியல் படிப்புகள் படிக்க இந்தியா வந்துள்ளார் தெற்கு ஜெர்மனியை சேர்ந்த ஜெக்கப் லிண்டன்த்தெல். அவர் கடந்த வாரம் நடைபெற்ற சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார். அதன் பின்னர் அவர் பெங்களூருவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய போது அவருக்கு ஃபாரீன் ரீஜினல் ரெஜிஸ்ட்ரேசன் ஆஃபிஸில் இருந்து மெயில் வந்துள்ளது.
பின்னர் அவர் கல்லூரிக்கு சென்ற போது அவருடைய துறை கோ-ஆர்டினேட்டர் இமிக்ரேசன் அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகளை உடனே சந்திக்க வேண்டும் என்று அவரை வற்புறுத்தியுள்ளார். என்னுடைய ரெஸிடெண்ட் பெர்மிட்டில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதால் அவர்களை சந்திக்க வேண்டும் என்றும் என்று ஜேக்கப்பிடம் அவர் கூறியுள்ளார். பின்னர் இமிக்ரேசன் அலுவலகம் சென்ற ஜேக்கப்பிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது. அது எதுவும் ரெஸிடென்சியல் பெர்மிட் தொடர்பானது கிடையாது. அது மிகவும் இயல்பான உரையாடல் தான்.
ஆனால் அதில் அவருடைய பொழுதுபோக்கு மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும், சி.ஏ.ஏ. போராட்டத்தில் பங்கேற்றது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. மேலும் மூன்று அதிகாரிகள் அடங்கிய குழுவில் ஒருவர் மட்டுமே கேள்வி எழுப்பினார். அவர்களுடைய பெயர்களைக் கூட கூறவில்லை. உரையாடல் முழுமையாக முடிவடைந்த பின்னர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எழுத்துபூர்மான உத்தரவு தரவேண்டும் என்று கூறிய போது விசாவை கொடுத்து உடனே நீங்கள் நாட்டைவிட்டு கிளம்ப வேண்டும். எழுத்துப்பூர்வமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று கூறியுள்ளனர் அதிகாரிகள். ஆனால் ஜேக்கப்பிற்கு இதுவரை அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அவர் சென்னையில் இருந்து ஜெர்மன் புறப்பட்டு சென்றார்.
இது தொடர்பான முழுமையான செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க
நான் இது போன்ற போராட்ட குழுக்களிடம் இருந்து விலகியே தான் இருக்கின்றேன் என்று அந்த அதிகாரிகளிடம் நான் கூறினேன். போராட்டத்தில் பங்கேற்றது குறித்து பேசிய அவர்கள் நான் முறையாக தகவல் தெரிவிக்காமல் போராட்டத்தில் பங்கேற்றதாக அவர்கள் கூறினார்கள்.
மேலும் போராட்டம் எதற்காக நடைபெறுகிறது என்பது தெரியாமல் ஏன் போராட்டத்தில் உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஜேக்கப், இது மனிதர்களின் அடிப்படை உரிமை. அதற்காக தான் போராட்டங்கள் நடத்தப்பட்டது என்று பதில் கூறியுள்ளார். என்னுடைய எண்ணங்கள் குறித்து தெளிவாக நான் அவர்களுக்கு எடுத்து கூறினேன் என்று அவர் கூறினார்.
ஐ.ஐ.டி. சென்னை வளாகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு இந்தியாவும் மிக பிடிக்கும். ஆனால் சுதந்திரமற்ற தன்மையை நினைத்து வருந்துகின்றேன். ஜெர்மனியில் போராட்டத்தில் பங்கேற்பதாக யாரையும் திருப்பி அனுப்பவதில்லை என்று கூறினார் ஜேக்கப். இது குறித்து ஐ.ஐ.டி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் ஊரில் இல்லை என்றும் தனக்கு இது குறித்து ஒன்றும் தெரியவில்லை என்றும் கூறினார். இயற்பியல் துறைத்தலைவர் சேதுபதி, டீன் சிவக்குமார் இருவருக்கும் இந்த பிரச்சனை குறித்து ஒன்றும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
எஃ.ஆர்.ஆர்.ஓ அதிகாரிகளிடம் கேட்ட போது, போராட்டத்தில் பங்கேற்றது விசா விதிமுறைகளுக்கு கீழ் தான் அடங்கும். இது குறித்து கல்வி நிறுவனங்கள் முறையாக எங்களுக்கு தகவல்கள் அனுப்பியிருக்க வேண்டும். அவருடைய விசா விரைவில் ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.