சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரக் கோரி வழக்கு

தமிழகம் முழுவதும் சிஏஏக்கு எதிராக அனுமதியின்றி நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரக் கோரிய வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

caa protest, chennai caa protest, சிஏஏ போராட்டம், சென்னை, சேலம் சிஏஏ போராட்டம், case on caa protest to windup seeks case, chennai high court order govt to answer, chennai high court to dgp, tamil news, news in tamil, tamil nadu news, latest tamil nadu news, latest tamil news, coronavirus
caa protest, chennai caa protest, salem caa prtest, சிஏஏ போராட்டம், சென்னை, சேலம் சிஏஏ போராட்டம், case on caa protest to windup seeks case, chennai high court order govt to answer, chennai high court to dgp, tamil news, news in tamil, tamil nadu news, latest tamil nadu news, latest tamil news

தமிழகம் முழுவதும் சிஏஏக்கு எதிராக அனுமதியின்றி நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரக் கோரிய வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரி கண்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.

அதில், சேலம் மாவட்டத்தில் பிப் 14-ம் தேதி முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் இந்த போராட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமியர் பங்கேற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சேலத்தை போல சென்னை மண்ணடியில் இரண்டு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனுமதியின்றி நடைபெற்று வரும் போராட்டங்கள் மீது காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவிற்காக காவல்துறை ஏன் காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழகம் முழுவதும் சிஏஏக்கு எதிராக அனுமதியின்றி நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து தமிழக அரசு மற்றும் டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Caa protest to windup seeks case chennai high court order govt to answer

Next Story
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஈரான் படகுகளில் சிக்கித் தவிக்கும் 400 தமிழக மீனவர்கள்Tamil nadu 400 fishermen stranded on boats iran, கொரோனா வைரஸ், ஈரான், இரானில் படகுகளில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள், coronavirus hits in iran, kish island, fishermen calling help at central government, coronavirus iran
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com