நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: திருக்கோவில் நிலம் எப்படி வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமாகும்? ஹெச். ராஜா கேள்வி
அந்தவகையில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்படுகிறது. இதன்மூலம், பழங்குடியினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் இனி இப்பிரிவினருக்கும் கிடைக்கும்.
மேலும் சத்தீஸ்கரில் வசிக்கும் பிரிஜியா சமுதாயத்தினரையும் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஹட்டி பிரிவினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil