Advertisment

தொலைக்காட்சி சேனல்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க ட்ராய்க்கு தடை? பதில் அளிக்க உத்தரவு!

சன் டிவி அளித்த மனுவை விசாரித்த சென்னை நீதிமன்றம் உத்தரவு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cable TV fees Sun network challenges TRAI

Cable TV fees Sun network challenges TRAI  : தொலைக்காட்சி சேனல்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கவும், ஒழுங்குபடுத்தவும் டிராய்க்கு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவை ரத்து செய்ய கோரி சன் தொலைக்காட்சி குழுமம் சார்பில் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், டிராய் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொலைக்காட்சி சேனல்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கவும், ஒழுங்குமுறைப்படுத்தவும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்க்கு அதிகாரம் வழங்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

Advertisment

அதனடிப்படையில் டிராய் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு அதன் விதிகளில் திருத்தம் கொண்டுவந்து அதிகபட்சமாக ஒரு தொலைக்காட்சி சேனலை 19 ரூபாய் கட்டணத்தை தாண்டி நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடாது என்ற விதிகளைக் கொண்டு வந்தது. இந்த விதிகளை எதிர்த்து தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடங்க வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த விதிகளில் மேலும் ஒரு திருத்தத்தை டிராய் கொண்டு வந்த்துள்ளது. அந்த திருத்தத்தின் படி நுகர்வோருக்கு வழங்கும் தொலைக்காட்சி சேனல் ஒன்றின் அதிகபட்ச கட்டணம் 19 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வரவுள்ள நிலையில், தங்களுக்கு உரிய வாய்ப்பை வழங்காமல் இந்த அறிவிப்பை டிராய் தன்னிச்சையாக செயல் படுத்தி உள்ளதாகும், தங்களுக்கு எந்தவித வாய்ப்பும் வழங்காமல் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திருத்தத்தை ரத்து செய்யக் கோரியும் சன்குழுமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது டிராய் நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், இதே போன்ற கோரிக்கையோடு பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தொலைக்காட்சி நிறுவனங்களின் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அந்த சங்கத்தில் சன் குழுமமும் உறுப்பினராக இருப்பதாக எடுத்துரைத்தார்.

அந்த வழக்கு விசாரணையில் இதுவரை டிராய் இன் இந்த திருத்தத்திற்கு தடை ஏதும் விதிக்கப்படாத நிலையில், மீண்டும் அவ்வழக்கு வரும் 30 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், அது வரை இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரினார். அதனை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், வழக்கில் மத்திய அரசையும் பதில் மனுதாரராக சேர்த்ததோடு, மனு தொடர்பாக இந்திய தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராயை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க : Weather News: குடை எடுத்துட்டு போக மறந்துடாதீங்க – லேட்டஸ்ட் வானிலை அறிக்கை

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment