சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட 2021-2022ம் ஆண்டு நிதியாண்டுக்கான அறிக்கை குறித்து சி.ஏ.ஜி அறிக்கை தொடர்பாக சென்னையில் முதன்மை தலைமை கணக்காயர் ஜெய் ஷங்கர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “டாஸ்மாக் மதுபான கொள்முதல் விவகாரத்தில் தொடர்ச்சியாக ஒரே நபர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டதால் மதுபான இறக்குமதியில் ஊழல். டாஸ்மாக் மதுபானத்தின் விலை உயர்த்தப்பட்டாலும், அதற்கேற்ற வரி அரசுக்கு செலுத்தப்படவில்லை. இதனால் ரூ.30.50 கோடி தமிழ்நாடு அரசுக்கு இழப்பு. டாஸ்மாக் மதுபான கடைகளில் ஏடிஎம் கார்டுகள் மூலம் பண பரிவர்த்தனை செய்து மது பாட்டில் வாங்கினாலும் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது;
டாஸ்மாக் தொடர்பான குற்றச்சாட்டுகள் வந்தால் அதனை தவிர்க்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை. தமிழ்நாட்டில் 12% டெண்டர்கள் மட்டும் தான் மின்னணு முறையில் நடைபெற்றுள்ளன. மற்றவை அனைத்தும் பழைய மேனுவல் முறையிலேயே நடைபெற்றுள்ளன. தணிக்கையின் செயல்பாடு அரசின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக தான்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“