கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்கலாமா? மத்திய அரசு, சிபிஐக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

குற்றம் சாட்டப்பட்டவர் வெளிநாடு செல்ல அனுமதி கோரினால் தகுதியின் அடிப்படையில் உயர் நீதிமன்றமே முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்தனர்.

வெளிநாடு செல்ல அனுமதிக்க கோரி கார்த்திக் சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு வரும் 12 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசு, சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவு.

கடந்த 2007ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. சுமார் 4 கோடி ரூபாய்க்கு அனுமதி பெற்று 305 கோடி அந்நிய முதலீடு பெற்றுதாகவும். முறைகேடாக மூதலீடுகளை பெற பணம் வாங்கியதாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகாததால் அவரை தேடப்படும் நபராக அறிவித்து அவருக்கு எதிராக 2 லுக் அவுட் நோட்டீஸ்களை சிபிஐ பிறப்பித்தது. கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக கடந்த ஆண்டு (2017) ஜூன் 16, ஜூலை 28 ஆகிய தேதிகளில் இந்த நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டன.

இந்த இரண்டு லூக் அவுட் நோட்டீஸை எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் சென்னை உயர் நீதிமன்ற அதிகார வரம்புக்கு உட்பட்டது. இந்த நோட்டீஸ் இல்லை என்றும் எனவே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டாது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திர சூட் ஆகியோர் கொண்ட அமர்வு, சிபிஐ சார்பில் வெளியிடப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ்களுக்கு தடை விதிக்க மறுத்தனர். கார்த்தி ப.சிதம்பரத்தின் மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் அமர்வு 2 மாதங்களுக்குள் முடிவு எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதுவரை அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ்கள் செயல்பாட்டில் இருக்கும் என்ற தெரிவித்த நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர் வெளிநாடு செல்ல அனுமதி கோரினால் தகுதியின் அடிப்படையில் உயர் நீதிமன்றமே முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்தனர்.

ஊழல் வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) தொடர்பான பிற மனுக்களை தாங்களே விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவை அடுத்து கார்த்திக் சிதம்பரம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளிநாட்டுக்கு செல்லவுள்ளதாகவும் இதற்கு அனுமதி வழங்க மத்திய அரசு மற்றும் சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கபட்டது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக மத்திய அரசின் குடியுரிமை துறை மற்றும் சிபிஐ ஆகியோர் வரும் 12 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close