அன்னிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு தடை கோரி இந்தியா சிமென்ட் மேலாண்மை இயக்குனர் சீனிவாசன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதை அடுத்து ஐபிஎல் போட்டிகளை தென்னாப்பிரிக்காவில் நடத்தபட்டது. அப்போது அந்த போட்டிகளில் பங்கேற்க சென்னை அணியின் வீரர்களை தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்துச் செல்லபட்டனர். அப்போது பல கோடி ரூபாய் பணம் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு மற்ற பட்டதில் விதி மீறல் இருந்த்தாகவும் அப்படி செல்லும் போது விதிகளை முறையாக பின்பற்றவில்லை என கூறி அமலாக்கதுறை வழக்கு பதிவு செய்தது.
அமலாக்கதுறை சார்பில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி முன்னாள் பிபிசிஐ தலைவரும், இந்தியா சிமென்ட் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு எதிரான அமலாக்கதுறை வழக்கு விசாரணை தவறானது. முறையாக அனுமதி பெற்ற பிறகே வீரார்களை அழைத்து சென்றதாகவும் இதில் எந்த விதிகளும் மீறிப்படவில்லை. பண சார்ந்த நடவடிக்கைளிலும் அனுமதி பெறப்பட்டதாகவும் எனவே அமலாக்கதுறை எனக்கு எதிராக பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ரிசர்வ் வங்கி சட்டத்தின் படி விசாரணை நடைபெறுவதால் தற்போதைய நிலையில் சீனிவாசன் மனுவை ஏற்க முடியாது என தெரிவித்து அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.